ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அங்குள்ள 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவது சம்பந்தமாக ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கை மற்றும் ஏற்படுத்த போகும் உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளார்.
10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படவில்லை என்பதால், அந்த இரண்டு தினங்களில் நாடாளுமன்றத்தை கூட்டிய தேசிய முக்கியத்துவமிக்க இந்த பிரச்சினை குறித்து விவாதம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இந்த துறைமுகத்தில் 65 வீத பங்குகளை சீனாவுக்கு வழங்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அந்த உடன்படிக்கையோ தற்போதைய உடன்படிக்கையோ நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை என்பதால், அவற்றை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.