மயங்கி விழுந்த மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி

Report Print Shalini in அரசியல்
2148Shares

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா மயங்கி விழுந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் பாராளுமன்றில் இன்று இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் கனேடிய தமிழர்கள் மூவருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோதே மாவை சேனாதிராஜா திடீரென்று மயக்கமடைந்துள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக அவர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு ஆபத்தான நிலைமைகள் எதுவும் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments