உக்கிரமான அடக்குமுறைக்கு காத்திருக்கும் அரசாங்கம்

Report Print Steephen Steephen in அரசியல்
52Shares

உக்கிரமான அடக்குமுறை சந்தர்ப்பம் வரும் வரை அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் காத்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ராஜித சேனாரத்ன மட்டுமல்ல, பட்டலந்த சித்திரவதை கூடம் தொடர்பான அவப்பெயரான வரலாற்றை கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க போன்றோர் அந்த சந்தர்ப்பம் வரும் வரை காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வாசுதேவ நாணயக்கார இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் மக்களின் எதிர்ப்புகளை காணமுடிகிறது. ஹம்பாந்தோட்டையில் நடந்தது போல் அரசாங்கம் சண்டியர்களை அழைத்து வந்துள்ளது.

சண்டியர்கள் எவரும் காயமடையவில்லை. சண்டியர்கள் மீது நாங்கள் கல்லெறிந்ததாக தற்போது கூறுகின்றனர்.

இதனால் தான் கலவரம் ஆரம்பித்ததாக கூறுகின்றனர். அப்படியானால் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் வைத்தியசாலையில் இருக்க வேண்டும்.

புது வருடத்தில் அகில இலங்கை மக்கள் போராட்டத்திற்கு அரசாங்கம் எமக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதனை தவிர வேறு ஒன்றையும் செய்ய முடியாது. கலவரங்களுக்கு மத்தியில்தான் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

பெரிய ஜன கலவரங்களுக்கு மத்தியிலேயே தற்போது அரசாங்கத்திற்கு வைபவங்கள் நடத்தப்படுகின்றன. இதுதான் எதிர்காலம் குறித்து அரசாங்கத்திடம் இருந்து கிடைத்துள்ள சமிக்ஞை.

இதனால், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு நாம் அரசாங்கத்திடம் கோருகிறோம். அதன் மூலம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க இடமளிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Comments