மஹிந்தவின் தலையில் ஏதோ பிரச்சினையிருக்கிறது! ஐதேக எம்.பி கிண்டல்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

முட்டாள்களின் பேச்சுக்களை நம்பிக்கொண்டு மக்கள் ஒருபோதும் குழப்பமடையமாட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

நல்லாட்சியை இவ்வருடத்துக்குள் கவிழ்த்து காட்டுவதாக தினந்தோறும் கூச்சலிட்டு பகல் கனவு காணும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த வாரத்தக்குள்ளேயே தேசிய அரசாங்கத்தில் உள்ள பலரும் பதிலளித்து விட்டார்கள்.

தொடர்ந்து அவர் இவ்வாறு கூறிக்கொண்டிருப்பாராயின் அவரின் தலையில் ஏதேனும் பிரச்சினை இருக்கலாம்.

முட்டாள்களின் பேச்சுக்களை நம்பிக்கொண்டு மக்கள் ஒருபோதும் குழப்பமடையமாட்டார்கள் என்றார்.

Comments