தனயனை பின்பற்றும் தந்தை!.. மஹிந்தவுடன் பேச வேண்டுமா?

Report Print Ramya in அரசியல்
95Shares

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் பேச விரும்புபவர்களுக்கு அரிய சந்தர்ப்பம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் மூலம் நேரலை ஒன்றை வழங்கவுள்ளார்.

இதன் மூலம் மக்கள் தங்கள் கேள்விகளைக் கேட்டு பதில்களையும் பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிணங்க எதிர்வரும் புதன்கிழமை(11) காலை 10 மணியளவில் கேள்விகளை எழுப்பி பதில்களையும் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் டுவிட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை மஹிந்த ராஜபக்ஸவின் தனயனான நாமல் உத்தியோகபூர்வ முகப்புத்த கணக்கில் நேரலை ஒன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments