ஜனாதிபதியின் இரண்டாண்டு பூர்த்தி விழா எப்போது? கம்மன்பில கேள்வி

Report Print Ajith Ajith in அரசியல்
67Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாண்டு பூர்த்தி நிகழ்வுகள் அரசாங்கத்தால் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், ஜனாதிபதி தனது இரண்டாண்டு பூர்த்தி நிகழ்வை எப்போது கொண்டாடியிருக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில.

கட்சித் தலைமையகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்றே தனது இரண்டாவது பதவி பூர்த்தியை நிறைவு செய்துள்ளார். நேற்றைய தினம் பொதுத்தேர்தல் நடைபெற்று 2 ஆண்டுகள் பூர்த்தியாகிய தினமாகும்.

எனவே, இன்றைய தினமே அவர் தனது இரண்டாவது பதவி பூர்த்தி நிகழ்வை கொண்டாடியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று 2 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்ட நிலையில் அவர் இதுவரை இந்நாட்டு மக்களின் கைகளுக்கு எதனைக்கொடுத்துள்ளார்?

அல்லது இதுவரை காலமும் செய்த பிரயோசனமான வேலைத்திட்டங்கள்தான் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் கம்மன்பில.

Comments