வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்! விசாரணைகள் ஆரம்பம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்
74Shares

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட விசாரணை குழு நாளை குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளது.

இந்த விசாரணை நாளையும், நாளை மறுதினமும் யாழ்.பொது நூலக வளாகத்தில் உள்ள மாகாணசபைக்குச் சொந்தமான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுக்களை வட மாகாண சபையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்தமையினைத் தொடர்ந்து இந்த விசாரணை குழு குற்றச்சாட்டுக்களை பெற்றது.

இந்நிலையில் குற்றசாட்டுக்களை முன்வைத்தவர்களிடம் மேற்படி விசாரணை குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்கான அறிவித்தல்கள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments