உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய ஆணைக்குழு எதிர்வரும் 17ஆம் திகதியன்று தமது மேன்முறையீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
குறித்த நேரத்தில் உள்ளுராட்சி தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகவே இருந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பழைய முறையில் தேர்தலை நடத்தாமல் இருக்க இணங்கியிருந்தனர், எனினும் தேர்தல்கள் தாமதமானமைக்கு தாம் காரணமில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையில், அரசியல் கட்சிகளின் பரிந்துரைகளாக 56 தொழில்நுட்ப திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதியன்று அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவினர் அமைச்சருக்கு அறிவித்துள்ளனர்.