இத்தாலி நாட்டுக்கு சொந்தமான நீர்முழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலானது 4 நாள் விஜயமாக இலங்கை வரவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த 'ஐ.டி.எஸ் கரேபினியன்' கப்பலானது நாளை மறுதினம் (புதன்கிழமை) இலங்கை துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போர்க்கப்பல்கள் 2 ஆவது தடவையாக இந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. அத்துடன் கடந்த வாரமளவில் பாகிஸ்தானிய போர்க்கப்பல்கள் 2 இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைக்கு 95 சர்வதேச போர்க்கப்பல்கள் விஜயம் மேற்கொண்டுள்ளன.
அந்த வகையில் கடந்த வருடம் 69 சர்வதேச போர்க்கப்பல்களும், அதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு 26 சர்வதேச போர்க்கப்பல்களும் இலங்கைக்கு வந்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.