நோய்த்தொற்றால் மயக்கம்.. அவசர சிகிச்சைப்பிரிவில் மாவை!

Report Print Vino in அரசியல்

மாவை சேனாதிராஜா நேற்று திடீரென மயக்கமடைய காலில் இருந்த காயம் ஒன்றில் ஏற்பட்ட நோய்த்தொற்றே காரணம் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நோய்த்தொற்று காரணமாக அவருக்கு கொழும்பு தேசிய மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வின் பின்னர் இடம்பெற்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அவர் திடீரென மயக்கமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments