ஆளும் கட்சியினரின் முரண்பாடான கருத்துக்களே ஹம்பாந்தோட்டையில் பிரச்சினைக்கான காரணம்

Report Print Kamel Kamel in அரசியல்
25Shares

ஆளும் கட்சியின் முரண்பாடான கருத்துக்களினாலேயே ஹம்பாந்தோட்டையில் பிரச்சினைகள் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றம் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பிரதமர் ஒரு நிலைப்பாட்டையும் அமைச்சர்கள் மற்றுமொரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

ஹம்பாந்தோட்டையில் காணிகள் பெற்றுக்கொள்வது தொடர்பில் பிழையான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 5,000 ஏக்கர் காணி கைப்பற்றப்பட்டுள்ளது இவ்வாறான நிலையில் 15,000 ஏக்கர் காணி வழங்கப்பட முயற்சிக்கப்படுகின்றது.

அரச தலைவர்களுக்கு அனர்த்தம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க சுமத்திய குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் மாநாயக்க தேரரான ஒமல்பே காசியப்ப தேரரும் இருந்தார்.

பொலிஸ் மா அதிபர் கூறிய கருத்துக்கள் பதிவு செய்யயப்பட்டு உள்ளது.

காவி உடைகளை களைந்து இவர்களை தாக்க வேண்டுமென பொலிஸ் மா அதிபர் கூறுகின்றார்.

ஆறு பௌத்த பிக்குகள் வைத்தியசாலையில் சிச்சை பெற்று வருகின்றனர். இது ஓர் மோசமான தாக்குதலாகும் என கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் உரிமையை வைத்துக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது என டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments