மைத்திரி - கோத்தபாய இணைந்து இலங்கையை ஆட்சி செய்வார்களா?

Report Print Vethu Vethu in அரசியல்
143Shares

இலங்கை அரசியல் தளத்தில் அடுத்து வரவுள்ள தேர்தல்கள் தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

அதேவேளை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை களமிறங்க சுதந்திர கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைக்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயரிடுவதற்கு பல காரணங்கள் உள்ளதாக கட்சியின் மத்திய செயற்குழு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்றுள்ள நிலையில், பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்களின் ஈர்ப்பை வெற்றிக் கொள்வதற்காக கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரியின் தேர்தல் நடவடிக்கைகளின் போது முன் நிற்க வேண்டும் என அவரை பிரதமராக்குவது அமைச்சர்களின் கருத்தாகும்.

அதற்கமைய கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் வரவிற்காக சிங்கள தொலைக்காட்சி சேவை விசேட வேலைத்திட்டங்கள் பலவற்றை பிரச்சாரம் செய்வதற்கு தற்போது தயார் நிலையில் உள்ளன.

19ஆம் திருத்தச்சட்டத்தில் உள்ள நிபந்தனைகளுக்கமைய அமெரிக்க குடியுறிமை பெற்ற கோத்தபாய ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவதற்கேனும் அனுமதி இல்லை என இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளம் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன் ஊடாக அவர் பிரதமர் வேட்பாளராக பெயரிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

கோத்தபாய ராஜபக்ச இரட்டை குடியுறிமை பெற்றுள்ளமையினால் அவர் நாடாளுமன்றம் செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை என கோத்தபாயவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் அண்மையில் கலந்துரையாடலுக்கு வருகைத்தந்த ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களிடம், கோத்தபாய அல்ல வேறு எந்த ராஜபக்சவுடனும் அரசாங்கம் ஒன்றை அமைக்க தான் தயாராக இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments