தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச ,பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே வருகை தந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,விமல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.