தன்னை இன்று கைது செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்ப்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக வீரவன்ச இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையானார்.
இந்நிலையில் நிதி மோசடி விசாரணை பிரிவின் கட்டட வளாகத்தில் ஊடகவியலாளரை சந்தித்த வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விமல் கடந்த மாதம் 28 ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.