நீதிமன்றம் செல்லத் தவறிய ஹிருணிக்கா! காரணம் என்ன?

Report Print Ramya in அரசியல்

2015ம் ஆண்டு தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம்தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்காபிரேமசந்திர இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

ஹிருணிக்கா பிரேமசந்திரவிறகு சுகயீனம் காரணமாகவே அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என அவரது வழக்கறிஞர் இன்றைய தினம் நீதிமன்றில்அறிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் ஹிருணிக்கா உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இருப்பினும்,ஏனைய எட்டு பேரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர்ஒருவர் கடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments