அரசியல் ஆட்டத்தில் மெளனித்த புலிகள்- விஸ்வரூபம் எடுக்கும் புதுப்பிரச்சினை..!

Report Print Mawali Analan in அரசியல்
2004Shares

இலங்கையில் பௌத்தம் அழிக்கப்படுகின்றது என்ற கருத்து மாறி இப்போது இலங்கையில் பௌத்தம் தாக்கப்படுகின்றது, எரிக்கப்படுகின்றது என்பதே அனைவராலும் விமர்சிக்கப்படும் முக்கிய பிரச்சினை.

உற்றுநோக்கும் போது இந்த பிரச்சினைகளை இலங்கையில் பாரதூரமான பதற்றமாக மாற்ற அண்மைக்காலமாக பல திட்டங்கள் வகுக்கப்பட்டன.

ஆனாலும் அவற்றில் மூலம் கிடைத்த பிரதிபலன் ஆட்சிக்கு எதிரான சக்திகளுக்கு திருப்தியற்றதாகவே அமைந்தன.

என்றாலும் அம்பாந்தோட்டையில் அண்மையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் பிரச்சினைகளின் பிறப்பிடமாக மாறிப்போய் விட்டது. அத்தோடு புதுப்பிரச்சினைகள் தோற்று விக்கவும் வழிவகுத்து விட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பிக்குமார்கள், மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் மீதும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்ட காணொளி வேகமாக பரப்பப் படுகின்றது.

காவிக்கு நேர்ந்த கதி இது சரியா? இனியும் நாம் பொறுமை காக்க வேண்டுமா? அப்பாவி தேரர் தாக்கப்படுவது முறையா? என்ற வகையில் இந்தக் காணொளி சமூக வலைத்தளங்கள் ஊடாக வேகமாக விமர்சிக்கப்படுகின்றது.

ஆட்சிக்கு எதிராக மக்களை திசை திருப்பும் செயலாகவே இது நோக்கப்படுகின்றது. காரணம் இலங்கையில் பௌத்தம் பெற்றுள்ள முக்கியத்துவமே.

இதேவேளை இதுவரையில் விடுதலைப்புலிகள் ஆட்சியை நிர்ணயம் செய்தார்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் புலிகளை காரணம் காட்டியும் அவர்கள் மீதான பயத்தையும் முன்னிலைப் படுத்தியுமே தேர்தல் வாக்குறுதிகள் பிறப்பிக்கப்பட்டன.

விடுதலைப்புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் கொஞ்ச காலம் அந்த பிரச்சினை தொடர்ந்தது. என்றாலும் இனியும் அதனை காரணம் காட்ட முடியாது என்ற நிலை உருவாகி விட்டது.

அந்த வகையில் அரசியல் ஆட்டத்தில் புலிகளை விட்டு விட்டு இப்போது பௌத்தத்தை முன்னிலைப்படுத்தி பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றமை வருகின்றமை காணக் கூடியதாக இருக்கின்றது என கூறப்படுகின்றது.

அதன் காரணமாக இப்போது பௌத்தம் அழிக்கப்படுகின்றது, தாக்கப்படுகின்றது என மாறி விட்டதனை அண்மைக்காலமாக அவதானிக்க முடியுமானதான இருக்கின்றது எனவும் அனைத்து வகையிலும் இதுவும் அரசியல் இலாபங்களுக்கான செயற்பாடுகளே என அரசியல் நோக்குனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Comments