வடமாகாணசபை 3 வருடங்கள் நிறைவில் 348 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அவைகிடப்பில் போடப்ப ட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை என அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.
வடமாகாணசபையின் 82ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது.
இதன்போதேஅவைத்தலைவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்றமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான இறுதி அமர்வில் வடமாகாணசபை 3 வருடங்களில்பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள போதும் அவை நடைமுறைபடுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இதற்கு இன்றைய அமர்வில் பதிலளித்த அவை தலைவர் 348 தீர்மானங்களைநிறைவேற்றியிருக்கும் வட மாகாண சபை அவை தொடர்பாக சம்பந்தப்பட்டதரப்புக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு குறித்த தரப்புக்கள்அனுப்பிய பதில் கடிதங்களும் உள்ளன.
எனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்நடைமுறைப்படுத்தப்படாமை சம்பந்தப்பட்ட தரப்புக்களை சேரும். என கூறினார்.