அம்பாந்தோட்டை முதலீட்டுத் திட்டத்தை மஹிந்த எதிர்ப்பதன் நோக்கம் என்ன? சீனா கேள்வி

Report Print Kamel Kamel in அரசியல்

அம்பாந்தோட்டை முதலீட்டுத் திட்டத்தை ஏன் மஹிந்த எதிர்க்கின்றார் என சீனா கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் மஹிந்தவின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிந்து கொள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் இன்று மஹிந்தவை சந்தித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

சீன முதலீட்டு வலயத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எதற்காக எதிர்ப்பை வெளியிடுகின்றார் என்பது குறித்து சீனத் தூதுவர் யீ ஸியான்லியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது, அம்பாந்தோட்டை பகுதியில் 15000 ஏக்கர் காணிகளை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவதனை எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக மஹிந்தவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Comments