சிலர் பிணங்களின் மீது ஏறி நலன் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் – முஜிபுர் ரஹ்மான்

Report Print Kamel Kamel in அரசியல்

சிலர் பிணங்களின் மீது ஏறி நலன் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் தமது அதிகாரம் வீழ்ச்சியடையும் என புரிந்து கொண்ட ராஜபக்ச அமைப்பினர் பிணங்களின் மீதேறியாவது அரசியல் இலாபம் ஈட்டலாம் என்று முயற்சிக்கின்றனர்.

அந்தவகையில் கடந்த சனிக்கிழமை ராஜபக்ச தரப்பினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

ராஜபக்ச தரப்பின் அனைத்து தரப்பினரும் ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டத்திற்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர். சமல் ராஜபக்ச மட்டுமே இந்த திட்டம் தொடர்பில் மாற்று நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் கொழும்பு மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். பல்தேச நிறுவனங்களுக்கு அவர்களது காணிகள் விற்பனை செய்யப்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில் ஹம்பாந்தோட்டை பற்றி பேசும் விமல் வீரவன்ச, டலஸ் அழப்பெரும, உதய கம்மன்பில ஆகியோர் எங்கிருந்தார்கள் என முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments