தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க பிரகடனம்

Report Print Ajith Ajith in அரசியல்
47Shares

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு வெளிவிவகார அமைச்சு பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வருடாந்தம் ஜனவரி 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய ஒருங்கிணைப்பு மற்றம் நல்லிணக்க வாரத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க பிரகடனத்தை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அந்தப் பிரகடனத்தில்,

“இலங்கையிலே தேசிய ஒருங்கிணைப்பு எண்ணக்கருவினை சாத்தியமாக்குவதற்கான பாரிய முயற்சியாக இன, மத, பிரதேசம் மற்றும் மொழி தொடர்பான பல்வகைத் தன்மைக்கு மதிப்பளித்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் இந்த பிரகடனத்தை மேற்கொள்வோம்:

நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் மனித வர்க்கத்தின் அங்கத்தவராவோம். சிறந்த புரிந்துணர்வு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் வரையறையற்ற சகோதரத்துவத்தினூடாகவும் இலங்கையின் சகல குடிமக்கள் மற்றும் சமுதாயங்களுக்கிடையே ஒருமைப்பாட்டினை உருவாக்கும் உன்னத நோக்கிலே நாம் செயலாற்றுவோம்.

இந்த மேலான குறிக்கோளிற்காக நாம் ஒவ்வொருவரும் கைகோர்த்துக் கொள்வோம் எனவும் அதனூடாக சுபீட்சமான தேசத்திற்காகவும் இலங்கையர் என்ற அடையாளத்திற்காகவும் அடித்தளம் இடுவோம் எனவும் உறுதி பூணுவோம்.

இலங்கையின் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்கும் சமாதானம், ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் என்பவை இன்றியமையாதவை என்பதை உணர்ந்து ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை சாத்தியமாக்க உறுதி பூணுவோமாக. " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments