நல்லாட்சி வெள்ளத்தில் போயுள்ளது - ரோஹித அபேகுணவர்தன

Report Print Ajith Ajith in அரசியல்

தற்போது நாட்டில் நல்லாட்சி வெள்ளத்தில் போயுள்ளதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாணைப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டதையடுத்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

ஜனநாயகமும், நல்லாட்சியும் நாட்டு மக்களின் வயிற்றுக்கு, வாய்க்கும் நன்றாக விளங்கியுள்ளது.

நாட்டில் இடம்பெறும் அநீதிகள் தொடர்பில் கருத்து வெளியிடுபவர்களை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, குற்றப் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு தான் தற்போது நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Comments