ராஜபக்ஸ என கூறி விழிக்கும் நல்லாட்சி அமைச்சர்கள்..! விமலின் கைதின் பின்னர் வெளிவந்த உண்மை

Report Print Vino in அரசியல்
668Shares

இன்று நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு விமல் அழைக்கபட்டத்தினை தொடர்ந்து அங்கு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் வருகைதந்திருந்தனர்.

இதன் காரணமாக அங்கு பதற்ற நிலை ஒன்று உருவாகியிருந்தது. விமல் வீரவன்சவின் கைதின் பின்னர் அங்கு வந்த உறுப்பினர்கள் சிலர் கருத்துக்களை தெரிவித்தனர்.

தனது கட்சியினை வழிநடத்திய முறையிலேயே இந்த நாட்டினையும் வழிநடாத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க முற்ப்படுகின்றார்.

அவரின் ஏகாதிபத்திய தன்னிச்சையான நிர்வாகம் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த பலர் அதனை விட்டு விலகியுள்ளார்.

இவற்றினை விட வேறு ஒன்றினையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எதிர்பார்க்க முடியாது என ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது யார் அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினர் என அரசாங்கம் ஆராய்ந்தால் அமைச்சரவையில் உள்ள அரைவாசி பேர் அதில் அடங்குவார்கள் என நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியில் தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது, எதிர்காலம் சிறந்ததாக அமையாது வாக்களித்த மக்கள் மறுபுறம் திரும்பியுள்ளனர்.

மக்கள் அனைவரும் இந்த அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்கு தயாராக உள்ளனர். தற்போது பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் மாற்றமடைவார்கள் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு உள்ளது.

இவர்கள் காலையில் ராஜபக்ஸ என்று கூறிக்கொண்டே விழிக்கின்றனர் என ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

எனது சித்தப்பாவினை சிறையில் அடைத்து இவ்வாறு அரசு செயற்படுவதாயின் எதிர்காலத்தில் தாங்களும் அவ்வாறு செயற்படுவோம் அவ்வேளையில் எம்மை தடுக்க முடியாது என விமல் வீரவன்சவின் அண்ணாவின் மகள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments