பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனை ஏற்றுக்கொள்ள முடியாது!

Report Print Kamel Kamel in அரசியல்
305Shares

அம்பாந்தோட்டையில் பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ராஜாங்க அமைச்சர் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற நான் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே எனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன்.

போராட்டக்காரர்கள் அம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை முற்றுகையிட்டிருந்தனர்.சில தரப்பினர் மக்களை பிழையாக வழிநடத்தி மக்களை திசை திருப்பியுள்ளனர்.

அம்பாந்தோட்டை முதலீட்டு அபிவிருத்தித் திட்டமானது மஹிந்த சிந்தனையை முன்னெடுப்பதேயாகும்.

அம்பாந்தோட்டையில் காணிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சீனாவிற்கு விற்பனை செய்யப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments