இந்த வருடத்திற்குள் ஆட்சிக் கவிழ்ப்பு: தினத்தைக் கூற முடியாது!

Report Print Ajith Ajith in அரசியல்
82Shares

ஆட்சிக் கவிழ்ப்பு என்பது காலம் கடத்தப்படாது. இந்த வருடத்திற்கு உள்ளேயே பார்க்க முடியும். தினத்தைக் குறிப்பட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று மஹிந்த பார்வையிட்டார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, சீன தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சீன தூதுவருடன் சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம் பெற்றது.

பாரம்பரிய காணிகள் தொடர்பான விடயங்களை அவருக்கு தெளிவுப்படுத்தியதாக மஹிந்த இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன் இது சீனாவுக்கு எதிரான நடவடிக்கை அல்ல என்றும் அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments