பிரதம நீதியரசரை சந்திக்கத் தயாராகும் மஹிந்த அணி

Report Print Ajith Ajith in அரசியல்

பிணை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்து தருமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வந்ததும் உடனடியாக பிணை பெற்று வீட்டுக்கு செல்கின்றார்.

இன்னுமொரு உறுப்பினர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுகின்றார். சில உறுப்பினர்கள் 50 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுகின்றனர்.

சரியான சட்ட ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் தான் இவ்வாறாக நீதவானின் அடிப்படையில் பிணை வழங்குவது தீர்மானிக்கப்படுகின்றது.

எனவே, இந்த விடயத்தில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு பொது எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் பிரதம நீதியரசரிடம் தாம் கோரிக்கை விடுக்க உள்ளதாக உதய கம்மன்பில இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Comments