வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்பாக இரண்டாம் நாளான நேற்று 9 பேர் சாட்சியமளித்துள்ளனர்.
வட மாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக முதலமைச்சர், இரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற அரச அதிபர் தலைமையில் விசாரணைக் குழுவினை அமைத்திருந்தார்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட குழுவினர் கடந்த இரு நாட்களாக விசாரணைகளில் ஈடுபட்டனர்.
இதில் நேற்று முன்தினம் இரு மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட 9 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
இவ்வாறு நேற்று சாட்சியமளித்தவர்களும், முன்வைத்த குற்றச்சாட்டுகளிலும் பல ஒரே அமைச்சருக்கு எதிராகவே முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணையில் நேற்று சாட்சியமளித்த 14 பேருடன் தற்போது மொத்தமாக 23 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.
இவ்வாறு சாட்சியமளித்தவர்கள் 4 அமைச்சர்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்த போதும் விவசாய அமைச்சருக்கெதிராகவே பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
அவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரையில் மொத்தமாக 23 பேர் இக்குழுமுன் சாட்சியம் அளித்துள்ளனர்.
அளிக்கப்பட்ட சாட்சிகளின் அடுத்த கட்டமாகவும் மேலும் சில சாட்சிகள் அடுத்த தவணையில் முன்னிலையாக சந்தர்ப்பம் கோரியுள்ளனர்.
இவ்வாறு விசாரணை இடம்பெறும் இடத்திற்கு விசேடமாக பொலிஸாரின் பாதுகாப்பு கோரப்பட்டு, இரு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.