சஜித்தின் பிறந்தநாள் இன்று! கஜ-சமர-கம கிராமம் பிரதமரால் மக்களிடம் கையளிப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறைஅமைச்சர் சஜித் பிரேமதாஸவின் 50ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

இந்த நிலையில், தென்னிலங்கையில் கிராமோதய திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கஜ-சமர-கம கிராமத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கின்றார்.

அத்துடன், சர்வதேச வீடமைப்பு ஆண்டின் 30ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் வகையில், கஜ-சமர-கம கிராமம் மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கப்படுகிறது.

இன்று ஞாபகார்த்த முத்திரையும் வெளியிடப்படும். இவ்வாண்டு 500 கிராமோதய கிராமங்களை மக்கள் பாவனைக்கு ஒப்படைப்பது அரசாங்கத்தின் இலக்கு என அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

இந்த கிராமம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்வெஹர பிரதேச செயலாளர் பிரிவில் சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதில் 70 வீடுகள் அமைந்துள்ளன. இதன் நிர்மாணப்பணிகள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொண்டுள்ளது.

Comments