சிறைக்குள் புத்தரை தேடும் வீரவங்ச

Report Print Ramya in அரசியல்
114Shares

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மகசீன் சிறைச்சாலை செல்வதற்கான அனுமதியை வீரவங்ச கோரியுள்ளார்.

மகசீன் சிறைச்சாலையில் உள்ள விகாரையில் ஒவ்வொரு போயா தினத்திற்கும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

குறித்த வழிபாடுகளில் கலந்துக் கொள்வதற்காகவே விமல் மகசீன் சிறைச்சாலை செல்வதற்கு அனுமதி கோரியுள்ளார்.

இன்றைய தினம் துருது போய தினமாகும்.இதேவேளை, குறித்த பூஜையில் கலந்துக்கொள்வதற்காக 85 கைதிகள் இவ்வாறு அனுமதி கோரியுள்ளனர்.

விமல் வீரவங்ச கடந்த 10ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments