ஜெயலலிதா சொத்து வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Report Print Samy in அரசியல்
1670Shares

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தை அரசுடைமையாக்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது சொத்துக்கள் யாருக்குப் போகும் என்ற விவாதம் நடந்து வருகிறது.

ஜெயலலிதாவுக்கு சென்னை போயஸ் கார்டன், கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் சொத்துக்கள் இருக்கிறது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்கக் கோரி கே.கே.ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிநபர் சொத்து தொடர்பாக பொதுநல மனுவை தாக்கல் செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Comments