ஜனாதிபதி, பிரதமருக்கு சாபம் கொடுத்த சஷி வீரவன்சவின் அத்தை!

Report Print Vethu Vethu in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அண்மையில் கைது செய்யப்பட்டதன் துயரத்தில் சஷி வீரவன்சவின் அத்தை ஒருவர் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னால் அழுது புலம்பியுள்ளார்.

அவர் சஷி வீரவன்சவை சிறிய வயது முதல் வளர்த்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

விமல் வீரவன்ச தனக்கு அவசியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் வாகனங்கள் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டதன் கோபத்தில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சஷியின் அத்தை கடுமையாக திட்டியுள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து நாட்டை கெடுத்து விட்டதாக அவர் அங்கு கூச்சலிட்டுள்ளார்.

இதன்போது பெற்றுக் கொள்ளப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Comments