மஹிந்தவுடன் முதல் பேரணியை ஆரம்பிக்கும் கட்சி!

Report Print Ramya in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பங்குப்பற்றுதலுடன் புதிதாக அமைக்கப்பட்ட "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன" கட்சியின் முதல் பேரணி இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதம் 27 ஆம் திகதி நுகேகொடை பகுதியில் பிற்பகல் 2 மணி மணியளவில் குறித்த பேரணி இடம்பெறும் என பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸ அலுவலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போதே இந்த பேரணி தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,மஹிந்த ராஜபக்ஸ குறித்த கட்சியில் உத்தியோகப்பூர்வமாக இணையவில்லை என்றாலும் மஹிந்தவின் ஆதரவாளர்களே கட்சியில் இணைந்துள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments