வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வதிவிட விசா

Report Print Ramya in அரசியல்

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வதிவிட விசா வழங்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குறைந்தது 3 இலட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்ளுக்கே வதிவிட விசா வழங்கப்படும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

அவ்வாறு முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 2 தொடக்கம் 5 வருட வதிவிட விசா வழங்கி வைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானமானது 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வசதிகளை வழங்கும் விடயத்தை செயற்படுத்துவதாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது சம்பந்தமான சட்டத்தை இன்னும் சில வாரங்களில் சட்டமாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Comments