விடுதலைப்புலிகளிடம் உதவி எதிர்பார்த்த மகிந்த..! - புலிகளின் கைதுகள் மிகப்பெரிய பிழை..!

Report Print Mawali Analan in அரசியல்
1878Shares

மகிந்த செய்த மிகப்பெரிய தவறு விடுதலைப்புலிகளை விடுதலை செய்தமையே என அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்த அவர்,

தனது அரசியல் ரீதியான செயற்பாடுகளுக்கு புலிகள் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் பயங்கர குற்றங்களை செய்த விடுதலைப்புலிகளோடு சேர்த்து 12200 புலி உறுப்பினர்களை விடுதலை செய்தார்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கு இணைவாக அவர் இதனைச் செய்யவில்லை. தனது கட்சிக்கும் தனக்கும் அவர்கள் உதவி செய்வார்கள் என்ற நோக்கத்தோடு மட்டுமே அவர் இதனைச் செயற்படுத்தினார்.

மிகவும் இரகசியமாக மகிந்த செய்த மிகப்பெரிய பிழையாகும். இந்தச் செயலினால் அவர் நினைத்தார் விடுதலைப்புலிகளை தம் பக்கம் இணைத்துக் கொண்டு அரசியலில் வெற்றி பெற்று விடலாம் என்றே.

ஜே. ஆர். ஜெயவர்தனவும் அதனைச் செய்தார் ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.

மேலும் இலங்கை இராணுவம் யுத்த வெற்றி பெற்றதன் பின்னர் தமிழ் மக்களுக்கு தீங்கிழைத்தார்கள் என்பதற்கு எந்த விதமான சாட்சியங்களும் இல்லை.

பிரபாகரன் இறந்தவுடனேயே யுத்தம் நிறைவுக்கு வந்துவிட்டது, கொலைகளும் நிறுத்தப்பட்டு விட்டது.

ஆனால் பிரச்சினைகள் தொடர்வதற்கு பிரதான காரணம் விடுதலைப்புலி உறுப்பினர்களை கைது செய்து வழக்கு தொடுத்ததே எனவும் சம்பிக ரணவக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments