ஐயா! திருடர்களை பிடித்தீர்களா? கேள்வியால் வெறுப்படைந்துள்ள அர்ஜூன ரணதுங்க

Report Print Steephen Steephen in அரசியல்
129Shares

குற்றம் செய்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் சிக்க வைக்க முடியாமையானது அரசாங்கத்தின் பலவீனம், பெரியளவில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும் இரண்டு வாரங்களில் பிணையில் விடுதலை பெற்று விடுகின்றனர் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பதுராகொட கெப்பட்டிவலான ஸ்ரீ சைலதலாராமய விகாரையில் இன்று(12) நடைபெற்ற “கமட சவிய” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் வீதியில் செல்லும் போது எங்களைப் பார்த்து ஐயா திருடர்களை பிடித்தீர்களா? எனக் கேட்கின்றனர்.

இதனை தவிர வேறு விடயங்கள் குறித்தும் கேள்வி எழுப்புவது குறைவு. பெரிய திருடர்கள் இரண்டு வாரங்களில் வெளியில் வந்து விடுகின்றனர்.

சிறிய தவறுகளை செய்த அதிகாரிகள் அடிக்கடி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு சென்று வருகின்றனர்.

இந்த நிலைமையை தவிர்க்க ஜனாதிபதியும் பிரதமரும் தலைமையேற்க வேண்டும். திருடர்களை பிடிக்கும் நடவடிக்கை தாமதமாகி வருவதால் நாங்கள் வெறுப்படைந்துள்ளோம்.

பெரும் எண்ணிக்கையிலான திருடர்கள் எமது அமைச்சர்களிடம் நெருங்கியுள்ளனர். அவர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

Comments