அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு வரிச்சலுகையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட புதிய லேண்ட்கூர்சர் பிராடோ வண்டி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளது.
வரிகளுடன் இந்த வாகனத்தின் பெறுமதி 4.5 கோடி ரூபாவாகும்.
விஜித் விஜயமுனி சொய்சா கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மொனராகலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதனையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட ஜனாதிபதித் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான வேட்பாளர்கள் மகிந்த ராஜபக்ச தரப்பினரால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
எஸ்.பி. திஸாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, மகிந்த சமரசிங்க உட்பட பல முக்கிய அரசியல்வாதிகள் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.