கனேடிய பெண்கள் விவகார அமைச்சருடன் விசேட சந்திப்பை மேற்கொண்ட சி.வி. விக்னேஸ்வரன்

Report Print Gokulan Gokulan in அரசியல்

முதல் தடவையாக கனடாவுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மெற்கொண்டிருக்கும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் பல அரசியல் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றார்.

கனேடிய பெண்கள் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சருடன் விசேட சந்திப்பொன்றை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளார்.

இச்சந்திப்பின் போது, “வடமாகாணத்தில் நடைபெற்ற போரின் காரணமாகப் பெண்கள் தலைமை ஏற்றிருக்கும் குடும்பங்கள் எதிர்நோக்கி வரும் பாரிய சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் ஒன்றாரியோவில் நடந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

பெண்கள் குடும்பங்களை தலைமையேற்றிருப்பதால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகின்றது. அங்கவீனர்களாக்கப்பட்ட பெண்களில் வாழ்வாதாரமும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

இந்தப் பெண்களின் வாழ்வை மேம்படுத்தவும் அவர்களின் வினைத்திறனை அதிகரித்து நம்பிக்கையூட்டவும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியிருக்கும் சட்ட நியமங்கள் வாயிலாக, ஒன்ராறியோ அரசால் எமக்கு உதவ முடியுமா?” என அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சரோடு வேறு பல விடயங்களையும் கலந்துரையாடிய Tracy MacCharles தமிழ் மக்களின் துயரத்தின் ஆழத்தைத் தான் புரிந்து கொள்வதாகவும் இப்பாதிப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் அடையாளம் காணப்பட்ட சிக்கல்களுக்குத் தாங்கள் எவ்வாறு உதவலாம் என்பதற்கான வழிகளைக் கண்டறிவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் வடமாகாணசபையுடன் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் இருப்பின் அவற்றை நிச்சயமாகப் பரிசீலிப்போம் என்றும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு நிறைவாக நடைபெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

Comments