நாமல் ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டதா?

Report Print Vethu Vethu in அரசியல்
307Shares

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தனக்கு எதிராக போலியாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகத்தை நாமல் சாடியுள்ளார்.

இலங்கை தேசிய பத்திரிகையில் கவனக்குறைவாக மற்றும் போலியான செய்தி வெளியிடப்படுகின்ற தொடர்பில் தனது வருத்தத்தை குறித்த பத்திரிகைக்கு தெரிவித்துக் கொள்வதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கேள்வி-பதில் வழங்கும் நடவடிக்கை மேற்கொண்டிருந்த நாமலிடம் “சட்ட பட்டம் பெற்ற எவ்வாறு?” என கேள்வி எழுப்பப்பட்டிருந்து.

குறித்த கேள்வி எழுப்பப்பட்ட சந்தர்ப்பத்தில் அதற்கு பதிலளிக்காமல் முழுமையாக அந்த நடவடிக்கையில் இருந்து விடை பெற்றார் என குறித்த கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த செய்தி முற்றிலும் போலியானதென நாமல் மறுத்துள்ளார். தேசிய பத்திரிகை ஒன்று இவ்வாறு செய்தி வெளியிடுவது அறியாமை மற்றும் துல்லியமற்றத் தன்மையாகவும் ஆச்சரியத்துக்குரியதாகவும் காணப்படுகின்றதென நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments