முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரி!

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்
117Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 25ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

25ம் திகதி காலை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கேப்பாப்பிலவு கிராமத்தில் ஒரு பகுதியை மக்களிடம் மீள கையளிக்கவுள்ளதுடன், முள்ளியவளை சு.வித்தியானந்தா கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 மாடி கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

மேலும் மாவட்டத்தில் காணி இல்லாத மக்களுக்காக 300 வரையான காணி உறுதிப்பத்திரங்களையும் ஜனாதிபதி வழங்கிவைக்க உள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Comments