Oops. Something went wrong. Please try again later
Desktop

டொனால்ட் ட்ரம்பின் பைல்களை தொகுத்த பிரிட்டன் உளவாளி..! ரஷ்யாவிற்கு பயந்து தலைமறைவு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

உலகில் சர்ச்சைக்குரிய மனிதர்களில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி இடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக அவர் தேர்வு செய்யப்பட்ட விதமே சர்ச்சையில் தான் வந்து நிற்கிறது.கடந்த ஆண்டு நவம்பர் 8ம் திகதி நடந்த தேர்தலில் ஹிளாரி க்ளின்டன் தான் வெற்றி வாய்ப்புக்களைத் தட்டிச் செல்வார் என கருத்துக்கணிப்புக்கள் தெரிவித்திருந்தன.

வெளிவந்த கருத்துக்கணிப்பிற்கு ஏற்றால் போலவே மறுநாள் தேர்தல் முடிவுகளும் வெளிவந்து கொண்டிருந்தன. எனினும், திடீரென டொனால்ட் ட்ரம்பின் பக்கம் வெற்றிவாய்ப்புக்கள் சாய்ந்தன.

இது அமெரிக்கர்களிடத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடத்தே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், எதிர்வரும் 20ம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்கிறார்.

இதுவொருபுறமிருக்க, உலகை அதிரவைத்த டொனால்ட் ட்ரம்ப் பைல்களை தொகுத்தது பிரிட்டனைச் சேர்ந்த கிரிஸ்டோஃபர் ஸ்டீல் எனும் முன்னாள் MI6 உளவாளி என புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ரஷ்யாவிற்கும், டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் நட்புறவானது வலுவாக இருக்கிறது. முன்னதாக அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் ட்ரம்பிற்கு சாதகமாக மாற ரஷ்யாவின் உதவிகளை ட்ரம்ப் நாடியிருந்தார் என செய்திகள் வெளியாகியிருந்ததுடன், அது சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தான் ட்ரம்பின் பைல்களை பிரிட்டனைச் சேர்ந்த கிரிஸ்டோஃபர் ஸ்டீல் எனும் முன்னாள் MI6 உளவாளி தொகுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இது, ரஷ்யாவிற்கு கோபத்தை ஏற்படுத்தம் என அஞ்சும் கிரிஸ்டோஃபர் ஸ்டீல், உயிருக்குப் பயந்து இங்கிலாந்தின் சர்ரேவில் உள்ள அவரது வீட்டில் இருந்து நேற்று இரவிலிருந்தே தலைமறைவாகிவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இங்கிலாந்தின் MI6 உளவு அமைப்பு அவரை பாதுகாக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது என இன்னொரு தகவல் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments