கோத்தபாய மீது காதலா? காருக்குள் சிக்கிய மர்மம்! சிறிமாவின் நிலை ஏற்படுமா?

Report Print Vethu Vethu in அரசியல்
1495Shares

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் கொழும்பில் வைத்து குறித்த அமைச்சரை கோத்தபாய சந்தித்துள்ளார். கோத்தபாய தனக்கு சொந்தமான காரில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த இரகசிய சந்திப்பு கிட்டதட்ட ஒரு மணித்தியாலம் வரை நீடித்துள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அங்கு கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகாத போதிலும் அமைச்சர் ஊடாக அரசாங்கத்தின் பிரதானி ஒருவருக்கு கோத்தபாய ராஜபக்ச தகவல் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக உள்ள வெலிக்கடை கொலை குற்றச்சாட்டு தொடர்பில் தளர்ந்த முறையொன்றை கடைப்பிப்பதற்கு அரசாங்கத்தின் பிரதானி வாக்குறுதியளித்துள்ளதாக இந்த தகவலை ஊகிக்கும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலை கொலை சம்பவம் இடம்பெற்ற கிட்டத்தட்ட 5 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தற்போது இந்த மரண விசாரணைக்கு இன்னமும் முடிவு எட்டப்படவில்லை.

அதனை நிறைவு செய்வதற்காக பொரளை பொலிஸார் பலமுறை நடவடிக்கை மேற்கொண்டுள்ள போதிலும் அரசாங்கத்தின் உயர்மட்ட அழுத்தம் காரணமாக விசாரணை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்த கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான பொலிஸ் விசேட அதிரடிபடையின் உதவி பொலிஸ் அதிகாரி சில்வெஸ்டர் விஜேசிங்கவை அழைத்து விசாரணை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் மா அதிபரிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ள போதிலும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் தற்போதைய பொலிஸ் மா அதிபர் அமைதியை கடைபிடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிக் விமான கொடுக்கல் வாங்கல் மற்றும் வெலிக்கடை கொலைக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் நேரடி தொடர்பு காணப்படுகின்ற நிலையில் நல்லாட்சி பிரதானிகளின் ஆசிர்வாதத்தில் கோத்தபாய ராஜபக்ச இன்னமும் நிரபராதியாகவே உள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிடும் நல்லாட்சியின் செயற்பாட்டாளர்கள், அரசாங்கம் அந்த அளவிற்கு கோத்தபாயவை காதலிக்கின்றது என்றால், சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு கவலை என்றால் ஜே.ஆர், சிறிமாவுக்கு செய்ததனை போன்று குடியுரிமையை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Comments