மலையகத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் சந்திரசேகரனின் புதல்வி அனுஸா சந்திரசேகரன், கட்சியின் உயர் பீடத்திற்கு ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் அரசியல் உயர் பீடக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சாந்தினி சந்திரசேகரனின் வேண்டுகோளுக்கு அமைய அனுஸா சந்திரசேகரன் உயர் பீடத்திற்கு நியமிக்கப்பட்டதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.