விக்னேஸ்வரனின் தகவலை சவாலுக்கு உட்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்

Report Print Ajith Ajith in அரசியல்
319Shares

மீள்குடியமர்த்தல் விடயத்தில் முஸ்லிம்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படவில்லை என்று வடக்கு முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தை சவாலுக்கு உட்படுத்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என் எம் அமீன், வடக்கு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், 2013 முதல் வடக்கில் காணிகளை பெற்றவர்களில் 73.02 வீத முஸ்லிம்களும் உள்ளனர் என்று விக்னேஸ்வரன் கூறியிருப்பது பிழையான வழிநடத்தல் என்று அமீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கவுன்ஸிலின் மற்றும் ஒரு உறுப்பினரான ஹில்மி அஹமட் தமது கருத்தில், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்ட நிலையில் 40 வீதமானோரே மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Comments