உள்ளக பொறிமுறையில் இலங்கை அர்ப்பணிப்பை கொண்டுள்ளது - மங்கள சமரவீர

Report Print Ajith Ajith in அரசியல்
57Shares

இலங்கையின் போர்க்குற்ற விசாரணையின்போது வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், உள்ளக விசாரணை பொறிமுறை என்ற விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனக்கொள்கை தொடர்பில் தொடர்ந்தும் இணக்கம் உள்ளது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் பிரித்தானிய சாத்தாம் ஹெளஸில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறை தொடர்பில் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்

2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்தபோதும் நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, பொருளாதார முன்னேற்றம் என்பவை இன்னமும் சவால்களாக உள்ளன. ஆட்சி நிர்வாகம் மற்றும் நீதியமைப்புக்களை இன்னும் வலுப்படுத்தவேண்டியுள்ளது.

இந்தநிலையில் 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொண்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கையின் அர்ப்பணிப்பாக உள்ளது என்றும் மங்கல சமரவீர குறிப்பிட்டார்.

இந்த அர்ப்பணிப்புக்கள் இலங்கையின் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் உள்ளடங்கியிருந்தமையை சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமையை கோடிட்டு காட்டியுள்ளார்.

Comments