நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்ட பின்னணியில், மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் செல்வாக்கு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.
சமகாலத்தில் வீரவன்சவுக்கு ஏற்பட்டு வரும் ஆதரவான போராட்டங்கள் ராஜபக்ஷ குடும்பத்திற்குள் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.
பாரிய மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ஷ குடும்பத்தின் மூவர் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலை சென்று வந்திருந்தனர்.
நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மஹிந்தவின் புதல்வர்களான நாமல் மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எந்தவித மக்கள் ஆர்ப்பாட்டமும் இடம்பெறவில்லை.
ஆனால் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள வீரவன்சவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது குறித்து நாமல் கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சி மாற்றம் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கு வீரவன்சவின் மக்கள் ஆதரவு பாதகமாக முடியும் என்பது நாமலின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பிர்கள் சிலர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்படும் ஒவ்வொரு தருணத்திலும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டால், அதற்கு பெறுமதி இல்லை என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
விமலுக்காக அதனை மேற்கொள்ளவில்லை என்றால் சரியில்லை என கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரவித்துள்ளனர்.
இதன் போது கோபமடைந்த மஹிந்த “அப்படி என்றால் எனக்கு பிடிக்காது என்று கூறுகின்றீர்களா? முடியும் என்றால் எனக்கு விமலை பிடிக்கவில்லை என நாடு முழுவதும் தகவல் ஒன்றை அனுப்பி வையுங்கள்.
நீங்கள் அனைவரும் எனது காரிலேயே செல்கின்றீர்கள் என்பதனை மறந்து விடாதீர்கள்”... என கூறிவிட்டு மஹிந்த அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.
எப்படியிருப்பினும் பினனால் நாமல் ராஜபக்ச இருந்தமையினால் இவர்கள் ஒன்றும் கூறாமல் அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.