தமிழ் சினிமா வரலாற்றில் இசையால் அனைவரையும் கட்டிப்போட்டவர் என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் தான்.
சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவரின் கால்களையும் தன்னையறியாமல் ஆடவைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
குறிப்பாக 90ம் ஆண்டுகளில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் அவரின் ஒவ்வொரு பாடல்களும் இன்றுவரை பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் இந்திய வரலாற்றில் இசைக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளிச் சென்று தமிழர்களைப் பெருமைப்படுத்தியிருந்தார் அவர்.
கடந்த 2016ம் ஆண்டு உலகில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன.
அவற்றை தன்னுடைய பழைய பாடலான ’டேக் இட் ஈசி ஊர்வசி’என்னும் பாடலை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றால் போல மாற்றி வெளியிட விரும்புவதாக அண்மையில் இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அவரின் அந்தப் பதிவிற்கு அவரின் ரசிகர்கள் ஏராளமானோர் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.
குறித்த அந்த பாடலை இப்பொழுது ஒரு மேடையில் ரஹ்மான் குழுவினர் பாடியிருக்கின்றனர்.
அப்பாடலானது இப்பொழுது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக கடந்தாண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள், இந்தியப் பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த 500, 1000 ரூபா நோட்டுக்கள் செல்லாது போன்ற விடையங்களை இந்தப் பாடலில் இணைத்துள்ளார் ரஹ்மான்.
குறித்த அந்தப் பாடலை நீங்களும் கேட்டுப்பாருங்கள்.