அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: நாங்களே நிறைவேற்றினோம்..! மார்தட்டிக்கொள்ளும் மஹிந்த

Report Print Vino in அரசியல்

தேசிய அரசாங்கமானது இதுவரை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை சிறைச்சாலை சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உண்மையில் தேர்தல் வாக்குறுதிகளை நாமே உரிய முறையில் நிறைவேற்றினோம். ஜனாதிபதி தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட தேர்தல்கள் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 99 வீதமானவற்றை நாம் நிறைவேற்றியுள்ளோம் என்றார்.

அவ்வாறே யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டு வருவோம் என கூறினோம், யுத்தத்தினையும் முடிவுக்கு கொண்டு வந்தோம்.

அதனை பின்னர் நாட்டில் அபிவிருத்தி திட்டங்களை செய்வதாக தெரிவித்து, அதனையும் நிறைவேற்றி நாட்டினை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் சென்றோம்.

ஆனால் தற்போது தமது ஆட்சிக்காலத்தில் இருந்த அபிவிருத்திகள் அனைத்தும் இன்று முற்று முழுதாக உடைக்கப்பட்டுள்ளதினை அறிய முடிகின்றது என்றார்.

Comments