மஹிந்தவும், நாமலும் எதிர்ப்பை உடனடியாக மீளப்பெறவேண்டும்..! எச்சரிக்கும் ரணில்

Report Print Murali Murali in அரசியல்
300Shares

ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் வெளியிட்டுள்ள எதிர்ப்பை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மகாநாயக்க தேரர்களிடம் சென்று இவ்வாறு எதிர்ப்பினை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் 50 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹராமவில் கஜசமரகம என்ற புதிய கிராமத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

தேர்தலுக்கு தயாராகும் நோக்குடனே தேசிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படும் இரு பிரதான கட்சியினருக்கு பதிலுக்கு பதில் குற்றச்சாட்டுகளையும் முரண்பாடான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், தேசிய அரசாங்க கொள்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Comments