அமெரிக்கத் தூதுவருக்கும் சம்பந்தனுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை?

Report Print Kamel Kamel in அரசியல்
255Shares

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப்பிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணியின் சர்வதேச நீதவான்கள் குறித்த பரிந்துரை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. எனினும் வடக்கின் சில ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது என சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கேற்றிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு ராஜதந்திரிகள் தலையீடு செய்ய முடியாது.

என்ற போதிலும் இந்த தடையை மீறி அமெரிக்கத் தூதுவர் செயற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன என சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Comments