உதய கம்மன்பில நான்கு நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி

Report Print Kamel Kamel in அரசியல்
21Shares

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில நான்கு நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நான்கு நாட்கள் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர். ஹெய்யான்துடுவ நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

போலியான அட்டர்னி பத்திரமொன்றை பயன்படுத்தி அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பங்குகளை விற்பனை செய்து 20 மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் குவைட் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கட்சி நடவடிக்கைகளுக்காக தாம் குவைட் செல்வதாக உதய கம்மன்பில சட்டத்தரணி ஊடாக நீதிமன்றிற்கு தெரிவித்திருந்தார்.

நீதிமன்றின் பொறுப்பில் காணப்படும் உதய கம்மன்பிலவின் கடவுச்சீட்டை தற்காலிக அடிப்படையில் வழங்குமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

நாடு திரும்பியவுடன் கடவுச்சீட்டை மீள நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உதய கம்மன்பிலவிற்கு உத்தரவிட்டுள்ளது.

Comments