விமலின் மகளை பார்த்து கண்ணீர் விட்ட மஹிந்த!

Report Print Vethu Vethu in அரசியல்
விமலின் மகளை பார்த்து கண்ணீர் விட்ட மஹிந்த!
1390Shares

தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்ச கடந்த செவ்வாய்கிழமை நிதி மோசடி விசாரணை பிரிவினரால் அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அன்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என ஆரம்பத்திலேயே அறிந்திருந்ததற்கமைய, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தங்கள் நண்பருக்கு ஆதரவு வழங்கும் வகையில் விசாரணை பிரிவிற்கு சென்றிருந்தனர்.

விமல் வீரவங்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததனை அறிந்த மஹிந்த உடனடியாக வெலிக்கடைக்கு சென்றிருந்தார். மஹிந்தவுடன் டலஸ், பவித்ரா, லொக்குகே உட்பட குழுவினர் சென்றிருந்தனர்.

அதன் போது விமலின் மனைவி, மகன் மற்றும் மகளும் அந்த இடத்திற்கு சென்றிருந்தனர்.

வெலிக்கடைக்கு சென்ற மஹிந்த விமலை பார்த்து “மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். நாங்கள் எப்படியும் இதனை எதிர்பார்த்து இருந்தோம் அல்லவா..” என குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு என்றால் கணக்கில்லை. எனினும் பிள்ளைகள் மிகவும் வருத்தப்படுகின்றார்கள்” என அதற்கு பதிலளித்த விமல் கூறியுள்ளார்.

விமலின் பிள்ளைகள் பக்கம் திரும்பிய மஹிந்த “கவலைப்பட வேண்டாம். உங்கள் தந்தை எந்த தவறும் செய்யவில்லை. இது பழி வாங்கல்” என குறிப்பிட்டுள்ளார்.

அதன் போது தந்தை கம்பிக்கு அப்பால் இருந்தே பார்க்க விடுகின்றார்கள் என விமலின் மகள் அழுதவாறு மஹிந்தவிடம் கூறியுள்ளார். இதனை பார்த்த மஹிந்த உட்பட அனைவரினதும் கண்கள் கலங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் விமலை பார்க்க பிள்ளைகள் சிறைச்சாலை வரும் போது பவித்ராவும் அவர்களுடன் செல்ல வேண்டும் என மஹிந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

பவித்ராவும் அதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Comments